விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு, ஓய்வூதிய திட்டம்... பாஜக தேர்தல் அறிக்கையில் அசத்தல்..!

By vinoth kumarFirst Published Apr 8, 2019, 12:50 PM IST
Highlights

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர்.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்குபெயர் வைக்கப்பட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வெளியிட்டனர். 

தேர்தல் அறிக்கை விவரம்..

* வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன் வழங்கப்படும்.

*  60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்.

* அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்யப்படும்.

* தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து விரைவாக ராமர் கோயில் கட்ட முயற்சி எடுக்கப்படும்.

* அனைத்து மாநிலங்களுடனும் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் இன்னும் எளிமையாக்கப்படும்.

* 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கட்டித்தரப்படும்.

* கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

* சிசான் சம்மான் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும்

* முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்

* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்

* நாடு முழுவதிலும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்

* 2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.

* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

*  சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும்.

* 2024க்குள் வீடுகள் அனைத்திற்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டுகள் வழங்கப்படும்.

* குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் நிறைவேற்றப்படும். 

* நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!