ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: மாநிலத்தின் மரியாதையை கெடுக்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!

Published : Mar 03, 2024, 01:32 PM IST
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: மாநிலத்தின் மரியாதையை கெடுக்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!

சுருக்கம்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் மாநிலத்தின் மரியாதையை பாஜக கெடுப்பதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இங்கு கடந்த 1ஆம் தேதி பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.  இதில் உணவகபணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் குண்டுவெடித்த உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழ‌க்கு மத்தியகுற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஹூப்ளி, தார்வாட், பெங்களூரு ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடிக்கும் முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் மாநிலத்தின் மரியாதையை பாஜக கெடுப்பதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பாஜக அவர்கள் காலத்தில் நடந்ததை மறந்து விட்டது வெட்கக்கேடானது, இதுபோன்ற விவகாரத்தில் அரசியல் செய்வது எனக்கு பிடிக்கவில்லை. அவர்கள் அரசியல் செய்தால் செய்யட்டும். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் மாநிலத்தின் மரியாதையை பாஜகவினர் கெடுக்கிறார்கள். இவ்வாறானதொரு சூழலில் இந்நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதி குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ராகுல் காந்தி உறுதி!

முன்னதாக, இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். இதனை பாஜகவினர் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கின்றனர் என முதல்வர் சித்தராமையாவும் குற்றம் சாட்டியிருந்தார்.

“வெடிகுண்டு வெடித்த காரணத்தால் காயமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம். வருகிற 8ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படவுள்ளோம். இந்தியாவில் இத்தகைய சம்பவம் இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதை மாநில மற்றும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.” என ராமேஸ்வரம் கஃபேவின் சிஇஓ ராகவேந்திர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!