
டெல்லி மாநகராட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாரதியஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது என விமர்சனம் செய்து வரும் நிலையில், தான் விமர்சிக்காமல் எச்சரிக்கையாக முதல்வர்அரவிந்த் கெஜ்ரிரால் இருந்து கொண்டார்.
272 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜனதா கட்சி 185 இடங்களில் வென்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 44 இடங்களைக் கைப்பற்றி 2 ம் இடத்தையே பெற்றது.
தேர்தல் முடிவுகளுக்கு முன், கடுமையாக மிரட்டல் விடுத்த முதல்வர் கெஜ்ரிவால், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நடந்துள்ள தில்லுமுல்லு தொடர்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்துவேன்’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்ததும், அந்த கட்சியின் பல தலைவர்கள் மோடி அலை அல்ல, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அலை என விமர்சனம் செய்தனர். இதனால், கெஜ்ரிவாலும் தான் முன்பு சொன்னது போல் போராட்டம் நடத்துவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பாரத விதமாக, கவனத்துடன் வார்த்தைகளை கையாண்டு பா.ஜனதா வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வௌியிட்டசெய்தியில், “ டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளிலும் அமோக வெற்றி பெற்ற பாரதியஜனதா கட்சிக்கு எனது வாழ்த்துக்கள். டெல்லியை சிறப்பாக உருவாக்க மாநகராட்சிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், முயற்சிகளையும் நான் இணைந்து எடுப்பேன்’’ எனத் தெரிவித்தார்