கர்நாடகாவிற்கு நீங்க என்ன செஞ்சீங்க.? இதை முதல்ல சொல்லுங்க மோடி!! வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி

By Raghupati R  |  First Published May 2, 2023, 4:02 PM IST

பிரதமர் மோடி இங்கு வந்து 91 முறை காங்கிரஸ் தாக்கியதாக கூறினார். அவர் கர்நாடகாவை பற்றி எதுவும் கூறவில்லை. பாஜக அரசு என்ன செய்யும் என்பதை அவர் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.


கர்நாடகாவில்  விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள சூழலில் ஆளும் கட்சி பாஜக, எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் என மூன்று கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரவமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்கிழமை) கர்நாடகாவில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாஜகவை வெளுத்து வாங்கினார். "பாஜகவின் இந்த அரசு திருட்டு அரசு ஆகும். ஜனநாயகத்தை அழித்து பாஜக 3 ஆண்டுகளுக்கு முன்பு திருடியது.

Tap to resize

Latest Videos

இந்த அரசு செய்த ஊழலைப் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை ? கர்நாடகாவில் ஊழலைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை அவர் சொல்ல வேண்டும்” என்று கூறினார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தனது கட்சியின் தலைவர்களைப் பற்றியும் பேச வேண்டும். பாஜக அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி இங்கு வந்து 91 முறை காங்கிரஸ் தாக்கியதாக கூறினார்.

அவர் கர்நாடகாவை பற்றி எதுவும் கூறவில்லை. பாஜக அரசு என்ன செய்யும் என்பதை அவர் சொல்ல வேண்டும். மோடி மட்டுமல்ல இந்த உலகில் மற்றவர்களும் இருக்கிறார்கள்.மற்றவர்களைப் பற்றி பேச வேண்டும். அவரது கட்சியின் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள்” என்று பேசினார். ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளதை கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் பரப்பி பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..IRCTC : இனி ஒருவருடைய ரயில் டிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் பயணிக்கலாம்.. முழு விபரம்

நேற்று பேசிய ராகுல் காந்தி, கர்நாடக தேர்தல் தன்னைப் பற்றியது அல்ல என்பதை நரேந்திர மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகள் மற்றும் கர்நாடகத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசுமாறு பிரதமரைக் கேட்டு, தன்னைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, இதை பேசுங்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துமகுரு மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காந்தி, “இந்தத் தேர்தல் உங்களைப் பற்றியது அல்ல, கர்நாடக மக்கள் மற்றும் அதன் எதிர்காலம் பற்றியது. காங்கிரஸ் உங்களை 91 முறை துஷ்பிரயோகம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் கர்நாடகாவிற்கு என்ன செய்தீர்கள் என்பது பற்றி நீங்கள் பேசவில்லை. அடுத்த உரையில், நீங்கள் என்ன செய்தீர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வீர்கள் என்பதைப் பற்றி பேசுங்கள் என்றார்.

இதையும் படிங்க..இனி மாம்பழம் சாப்பிட மட்டும் கிடையாது மக்களே.!! விஞ்ஞானிகள் புது கண்டுபிடிப்பு - அசந்து போயிடுவீங்க.!

இதையும் படிங்க..மாதம் 1 லட்சம் வரை சம்பளம்.. டிஎன்பிஎஸ்சியில் அருமையான வேலைவாய்ப்பு - முழு விபரம்

click me!