அப்படிபோடு.! பாஜக தேர்தல் அறிக்கையில் இத்தனை சிறப்பு அம்சங்களா? லிட்ஸ் போட்ட பிரதமர் மோடி!

By vinoth kumarFirst Published Apr 14, 2024, 10:35 AM IST
Highlights

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உரையாற்று வருகிறார். 

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. 

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உரையாற்று வருகிறார். இந்த நாளை ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது மகிழ்ச்சி. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரிடமும் பரிந்துரைகளை கேட்டு, இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்

* நாடு முழுவதும் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்.

* 2036ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை.

* 2025ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

* கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து நீக்கியுள்ளோம். தொடர்ந்து இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம்

* 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் 

* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்

* 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

*  மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

*  இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்.

* மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர்

* வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

* கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம்

* நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும்.

* முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்

* அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

* சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

* பெண்களுக்கு ரூ.1க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்.

* மலைவாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* லாரி ஓட்டுநர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம்.

* நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

* வேலைவாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

click me!