சுனாமி போல் சுழன்று அடிக்கும் கொரோனா.. ஜே.பி. நட்டா உள்ளிட்ட விஐபிகளை விரட்டி விரட்டி தாக்கும் தொற்று..!

By vinoth kumarFirst Published Jan 11, 2022, 6:43 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சகட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன. முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களை கொரோனா தாக்கி வருகிறது. 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,70,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு முன்பு நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகள் சராசரியாக 10,000-15,000 என்று பதிவு செய்யப்பட்டன. தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சகட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன. முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்களை கொரோனா தாக்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  

இதுதொடர்பாக ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அறிகுறிகள் தென்படத் தொடங்கியவுடன் நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். பரிசோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது நலமாக உள்ளேன். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

click me!