மக்களுக்கு ஹாப்பி நியூஸ்... வார இறுதி நாட்களில் ஊரடங்கும் இல்லை... பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடையும் இல்லை!!

By Narendran SFirst Published Jan 10, 2022, 8:57 PM IST
Highlights

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்றும் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்றும் அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, டிசம்பர் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவை பொங்கல் விழாவின் பொதுக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை ஏற்படும் என்ற அச்சம் தமிழகம் மற்றும் புதுவை மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில், புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு இல்லை என்றும் புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக புத்தாண்டு சமயத்திலும் தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், புதுச்சேரியில் தடை விதிக்கப்படவில்லை. இதனால் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டில் இருந்து பலரும் புதுச்சேரி நோக்கிப் படையெடுத்தனர். அப்போது சமூக இடைவெளி, மாஸ்க் இல்லாமல் ஒரே இடத்தில் பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகக் குவிந்திருந்தது பரபரப்பைக் கிளப்பியிருந்தது. புத்தாண்டு தினத்திற்குப் பின்னர் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

click me!