பாஜகவுடன் கூட்டணி வைத்த 48 மணிநேரத்தில் பலன்... அஜித் பவாரின் 35 ஆயிரம் கோடி ஊழல் வழக்கு தள்ளுபடி..!

By vinoth kumarFirst Published Nov 25, 2019, 6:14 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, அஜித் பவார் மாநில நீர்பாசன துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது, 1999-ம் முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த, மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களை அமல்படுத்தியதில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மீதான முறைகேடு வழக்குகள் முடித்து வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, அஜித் பவார் மாநில நீர்பாசன துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது, 1999-ம் முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்த, மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களை அமல்படுத்தியதில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, மகாராஷ்டிராவில் 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், நீர்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, அஜித் பவார் மீது மாநில லஞ்ச ஒழிப்புத் துறையும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதிரடி திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவராக இருந்த அஜித் பவார் துணை முதல்வராக சனிக்கிழமை பதவியேற்று கொண்டனர்.

இந்நிலையில், இந்த ஊழல் வழக்கிற்கும் அஜித் பவாருக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 

click me!