மசூதிகளில் சம உரிமைக்கு போராடி விட்டு சபரிமலைக்கு வா... ரெஹானா ஃபாத்திமாவுக்கு எதிர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Nov 25, 2019, 4:28 PM IST
Highlights

அனைத்து இடங்களிலும் பெண்கள் சமமாக  அனுமதிக்க பட வேண்டும் என்பதே ரெஹானா ஃபாத்திமாவின் ஒரே குறிக்கோள் எனில்,  அவரது மதத்தின் மசூதிகளில் சம உரிமைக்கு போராடி விட்டு சபரிமலைக்கு வாதாட வரட்டும் என ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கிய பின்னர், முதலில் சென்ற பெண் ரெஹானா பாத்திமா. ஒரு பெண் பத்திரிகையாளர் மற்றும் பாத்திமா இருவரும் சபரிமலை சென்றபோது அங்கு ஐயப்ப பக்தர்களால் தடுத்து அனுப்பப்பட்டனர். இதையும் மீறி ரெஹானா பாத்திமாவும், பெண் பத்திரிக்கையாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் உடை அணிவித்து ஐ.ஜி. தலைமையிலான பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர்.

பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கையாளரையும் திருப்பி அனுப்பினர்.

இந்தாண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்கு தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கேரள காவல்துறைக்கு மனு அனுப்பியுள்ளார் ரெஹானா பாத்திமா. ஆனால் ரெஹானா பாத்திமாவுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்க முடியாது என காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து பேசிய கேரள மாநிலக் காவல்துறையின் முக்கிய அதிகாரியான ஒருவர் பெண்ணியவாதிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை. சபரிமலை ஐயப்பன் கோவில் புரட்சி செய்வதற்கான இடமில்லை என மாநில அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது என கூறினார். இந்நிலையில் ரெஹானா பாத்திமாவுக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

'’ஒரு மதத்தினரின் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கத்திலேயே ரெஹானா சபரிமலைக்கு செல்வது நன்றாகவே புரிந்தும் இந்திய சட்டங்கள் எந்த விதத்திலும் தடுக்கவில்லையே. அது ஏன்..? குருசாமிகள் மூலம் மாலை போட்டு விரதம் இருப்போர் மட்டுமே சபரிமலை ஐயப்ப வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். "ரெஹானா பாத்திமா"க்கு சபரிமலை கோயிலில் என்ன வேலை? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

அதேபோல் மற்றொருவர், ‘’அனைத்து இடங்களிலும் பெண்கள் சமமாக  அனுமதிக்க பட வேண்டும் என்பதே இவரது ஒரே குறிக்கோள் எனில்,  அவரது மதத்தின் மசூதிகளில் சம உரிமைக்கு போராடி விட்டு சபரிமலைக்கு வாதாட வரட்டும்’’என கொதித்துள்ளார்.  

3 ஜாதி கட்சிகள் தான் நாட்டை ஆழப் போகிறது.. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தாக்கி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு பேச்சு..!
 

click me!