#Breaking : வீரமரணம் அடைந்தார் தலைமை தளபதி பிபின் ராவத்… அறிவித்தது இந்திய விமானப் படை!!

By Narendran SFirst Published Dec 8, 2021, 6:18 PM IST
Highlights

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது. 

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது.  கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இதனை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் குன்னூர் புறப்பட்டார். இவ்வாறு உள்ள நிலையில் ஜனாதிபதியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ராணுவ ஹெலிகாப்டர் விபத்து அடுத்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.பிற்பகல் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். அதோடு பாதுகாப்பான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.

 

With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.

— Indian Air Force (@IAF_MCC)

இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமான படை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!