இனி ட்ரெயின்களில் பயோ டாய்லெட் தான்….. பயணிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தும் ரயில்வே நிர்வாகம்….

 
Published : May 18, 2018, 07:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
இனி ட்ரெயின்களில் பயோ டாய்லெட் தான்….. பயணிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்தும் ரயில்வே நிர்வாகம்….

சுருக்கம்

Bio toilet in indain trains

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும்  தண்ணீர் அதிகம் தேவைப்படாத ‘பயோ- கழிப்பறை’ வசதி கொண்டு வரப்படும் என்று ரெயில்வே வாரியத் தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை சார்பில் சர்வதேச ரெயில் பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி தொடக்க விழா சென்னை ஐ.சி.எப்.-ல் உள்ள அம்பேத்கர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.



விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, ஐ.சி.எப். பொதுமேலாளர் சுதன்சு மணி, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் ஆர்.தினேஷ், ரெயில் போக்குவரத்து தலைவர் சி.பி.சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் பேசிய இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி ,
இரட்டை ரெயில் பாதைகள் ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இணைக்கப்பட இருக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்’ எனும் நவீன விரைவு திட்டம் ரெயில்வேயில் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரெயில் சேவை இன்னும் வளர்ச்சி அடையும் என தெரிவித்தார்..



வருகிற 2022-ம் ஆண்டு 130 மெகாவாட் காற்றாலை மின்சாரம் மற்றும் சோலார் திறனில் இயங்கும் ‘அதி நவீன சோலார் ரெயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்த இந்தியன் ரெயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரெயில்களிலும்  தண்ணீர் அதிகம் தேவைப்படாத ‘பயோ- கழிப்பறை’ வசதி கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்