நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள்!

Published : Aug 03, 2023, 08:22 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள்!

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இன்றைய அலுவல்களின் போது, பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்யவும், நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 31 மசோதாக்களை விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற அலுவல்கள் முடங்கியுள்ளன. இருப்பினும், மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால், ஆளும் மத்திய பாஜக அரசு தான் திட்டமிட்ட மசோதாக்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. மேலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சில மசோதாக்கள் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 'சேவைகளுக்கு இடையேயான அமைப்புகள் (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா, 2023'-யை மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தாக்கல் செய்யவுள்ளார். 'இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா, 2023ஐ மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். மேலும், 'மருந்தகங்கள் (திருத்தம்) மசோதா, 2023'ஐ அமைச்சர் மன்சுக் மாண்டேவியாவும், 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2023'ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் தாக்கல் செய்யவுள்ளனர்.

ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு: அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

அதேபோல், மாநிலங்களவையில், கடல் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2023-யை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, 2023 மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும், பத்திரிகைகள் மற்றும் பதிவு மசோதா 2023ஐ மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் டெல்லி அவசரச் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த மசோதா பாஜகவின் பெரும்பான்மை காரணமாக மக்களவையில் நிறைவேறி விடும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜு ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் மாநிலங்களவையிலும் அந்த மசோதா நிறைவேறும் வாய்ப்புள்ளது. இந்த மசோதாவை இந்த மழைக்காலக் கூட்டத்தொடரின் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
நவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!