
இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செயற்கை நுண்ணறிவு, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகள் குறித்து பில்கேட்ஸ் உடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திப்பது எப்போதும் உத்வேகம் அளிப்பதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ நரேந்திரமோடியை சந்திப்பது எப்போதும் உத்வேகத்தை அளிக்கிறது. விவாதிக்க நிறைய இருந்தது.
சக்திவாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் மோடி, அமித் ஷா! டாப் 10 லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார்?
பொது நலனுக்காக AI பற்றி பேசினோம்; மேலும்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை தழுவலில் புதுமை; இந்தியாவிலிருந்து உலகிற்கு நாம் எவ்வாறு பாடம் எடுக்க முடியும் ஆகியவை குறித்து பேசினோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பில்கேட்ஸின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி “ உண்மையிலேயே ஒரு அற்புதமான சந்திப்பு! நமது கிரகத்தை சிறந்ததாக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் துறைகளைப் பற்றி விவாதிப்பதில் எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ANI க்கு அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு துறையில் நிறைய அற்புதமான பணிகள் நடந்து வருவதாக பில்கேட்ஸ் கூறினார், மேலும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிறைய தலைமைத்துவ பணிகளை செய்ய நாடு தயாராக உள்ளது என்றும் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.4 சதவீதம் வளர்ச்சி: பிரதமர் மோடி மகிழ்ச்சி!
மேலும் ", இந்த நாட்டில் பல அற்புதமான செய்ற்கை நுண்ணறிவு வேலைகள் நடக்கின்றன. நந்தன் நிலேகனி போன்ற புதிய கண்டுபிடிப்பாளர்கள் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களிடம் வாத்வானி போன்ற குழுக்கள் உள்ளன. உங்களிடம் உள்ளது. IIT குழுக்கள் மிகவும் நவீனமானவை.இந்தியாவில், செய்ற்கை நுண்ணறிவு துறையில் பல அருமையான தலைமைத்துவப் பணிகள் இந்தியாவில் இருக்கும். மேலும் இது சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் ஏழைகளுக்கு உதவும் போது, அதை வடிவமைக்க உதவுவதில் எங்கள் அறக்கட்டளை பெருமைப்படும். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியா விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளது. முக்கிய பகுதிகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று” பில்கேட்ஸ் தெரிவித்தார்.