பள்ளி ஆசிரியை நீது, தான் காணாமல் போன பணம் குறித்து மாணவர்களிடம் விசாரிக்க மட்டுமே செய்ததாகக் கூறினார். "மாணவர்கள் தாங்களாகவே அருகில் உள்ள கோவிலுக்குப் போய் கடவுள் மீது சத்தியம் செய்யச் சென்றனர்" என்றும் அவர் கூறியள்ளார்.
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பெண் ஆசிரியையை, தனது பர்ஸில் இருந்து 35 ரூபாயைத் திருடவில்லை என்று கடவுளின் பெயரில் சத்தியம் செய்யுமாறு அனைத்து மாணவர்களையும் அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியையின் நடத்தைக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுபற்றி விசாரணை செய்த கல்வித்துறை அந்த ஆசிரியரை பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை ராஜாவுன் தொகுதியில் அஸ்மானிசாக் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் வந்தடைந்தனர். அப்போது பள்ளி ஆசிரியர் நீது குமாரி ஒரு மாணவனிடம் தனது பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைக் கொண்டுவரும்படி கூறினார். பிறகு தனது பையைச் சரிபார்த்த அவர், ரூ.35 காணாமல் போனதை கண்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளார்.
சரஸ்வதியை மதிக்காத டீச்சருக்கு வேலை கிடையாது! சஸ்பெண்ட் செய்த ராஜஸ்தான் அரசு!
மாணவர்களில் யாரும் காணாமல் போன பணத்தைப் பற்றி உறுதியான பதிலைக் கொடுக்காததால், அவர் அனைத்து குழந்தைகளையும் அருகிலுள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று கடவுள் மீது சத்தியம் செய்யச் சொல்லியிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் இருந்தனர். பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதிலும் சம்பவம் நடந்த நாளில் நீது குமாரி ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். ஆசிரியர் நீது குமாரியின் செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஊர்மக்கள் மறுநாள் ஆசிரியைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பள்ளியை செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கிராம மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்ற கல்வி அதிகாரி குமார் பங்கஜ், நீது குமாரி வேறு இடத்திறகு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். "எந்தவொரு மாணவரையும் இவ்வாறு சந்தேகிப்பது முறையற்றது" என்றும் அவர் கண்டித்துள்ளார்..
பள்ளி ஆசிரியை நீது, தான் காணாமல் போன பணம் குறித்து மாணவர்களிடம் விசாரிக்க மட்டுமே செய்ததாகக் கூறினார். "மாணவர்கள் தாங்களாகவே அருகில் உள்ள கோவிலுக்குப் போய் கடவுள் மீது சத்தியம் செய்யச் சென்றனர்" என்றும் அவர் கூறியள்ளார்.
கிராம மக்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் சொல்கிறார். "கடந்த 18 வருடங்களாக இந்தப் பள்ளியில் நான் பாடம் நடத்துகிறேன். என் மாணவர்களை நானே எப்படி சந்தேகிப்பது" என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும், அவர் தன்னிடமிருந்து காணாமல் போன பணத்தைக் கண்டுபிடிக்கவில்லை.
'அழகான முகத்தை மறைக்குதே...' பர்தா அணிந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த சென்னை போலீஸ்!