
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் கட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பீகார் பீகார் துணை முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் குமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசராய் சட்டப்பேரவை தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் லக்கிசராய் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளுக்கு காலை முதல் நேரில் சென்று விஜய் குமார் சின்ஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி கிராமத்தில் அவரை நுழைய விடாமல் ஆர்ஜேடி ஆதரவாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கற்கள், காலணிகளை காரின் மீது வீசியது மட்டுமல்லாமல் அவருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பீகார் துணை முதல்வரும், லக்கிசாராய் பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா: இந்த தாக்குதலை RJD திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டினார். இவர்கள் RJD-யின் குண்டர்கள். NDA மீண்டும் ஆட்சிக்கு வருவதால், அவர்கள் பீதியடைந்துள்ளன. RJD ஆதரவாளர்கள் தன்னை கோரியாரி கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாகவும், தனது வாக்குச்சாவடி முகவரை வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
அவர்கள் எனது வாக்குச்சாவடி முகவரைத் திருப்பி அனுப்பி, அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. கோரியாரி கிராமத்தில் உள்ள 404 மற்றும் 405-வது வாக்குச்சாவடிகளில் இந்த அராஜகம் நடந்தது. இந்ததடை இருந்தபோதிலும், தனது வெற்றி உறுதி என்று அவர் கூறினார். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.