பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ்குமார்... - 10 மணிக்கு பதவி ஏற்பு...

First Published Jul 27, 2017, 7:44 AM IST
Highlights
Bihar Chief Minister Nitish Kumars resignation has resigned today and is back with the support of the BJP.


பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் நேற்று ராஜினாமா செய்த நிலையில், பாஜக ஆதரவுடன் மீண்டும் இன்று முதல்வராகிறார்.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதில் நிதிஷின் கட்சிக்கு 71 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தள கட்சிக்கு 80 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸுக்கு 27 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

இதனிடையே ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டலுக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டு இருந்து வருகிறது.

இதுகுறித்த சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், லாலுவின் மகனும் பீகார் மாநிலத்தின் துணை முதல்வருமான தேஜஸ்வியின் பெயரும் உள்ளதால், முதலமைச்சர் நிதிஷ் குமார் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.   

ஆனால் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த லாலு, தமது மகன் பதவி விலக மாட்டார் எனத் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா நேற்று ராஜினாம செய்தார்.

அவருக்கு பாஜக ஆதரவு தருவதாக பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

அதன்படி இன்று மீண்டும் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பீகாரின் துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பதவியேற்க உள்ளார்.

 

click me!