Nitish Kumar Angry:இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்

By Pothy Raj  |  First Published Feb 22, 2023, 11:39 AM IST

இது என்ன இங்கிலாந்தா, ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், இந்தியில் பேசுங்கள் இதுபீகார் என்று விவசாயி ஒருவரை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். 


இது என்ன இங்கிலாந்தா, ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள், இந்தியில் பேசுங்கள் இதுபீகார் என்று விவசாயி ஒருவரை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடிந்து கொண்டார். 

4வது வேளாண் செயல்திட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று பாட்னாவில் உள்ள பாபுசபாநகரில் நேற்று நடந்துத. இந்தக் கூட்டத்தில் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், வேளாண் அமைச்சர் குமார் சர்வஜித், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றிருந்தனர்.

Tap to resize

Latest Videos

ஏராளமான விவசாயிகள் பட்டியலை தயாரித்திருந்த பீகார் அரசு, அவர்களை மேடைக்கு அழைத்து விவசாயத்தில் தாங்கள் மேற்கொண்ட புதிய முயற்சிகளை விவரித்துப் பேச அழைத்திருந்தது.

இதில் 4வது விவசாயியாக அமித் என்பவர் மேடை ஏறினார். அவர் பேசுகையில் “ இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கும். முதல்வர் நிதிஷ் குமாரின் தொலைநோக்கு அரசியலுக்கு நன்றி, அவரால்தான் இங்கு இந்தநிலைக்கு வந்துள்ளேன்”எ ன்று ஆங்கிலத்தில் பேசினார்.

மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாகத் திரிகிறார்கள்! ஜாவேத் அக்தர் பேச்சு

அது மட்டுமல்லாமல் விவசாயி அமித் தொடர்ந்து ஆங்கிலத்திலும், இந்தியிலும், தனது வேளான் முயற்சிகளையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து பேசி, ஏராளமான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார். உணவு உற்பத்தி, நுகர்வு, தீர்வு, உரங்கள் உள்ளிட்ட வேளாண் கலைச்சொற்களுக்கு இந்தியைப் பயன்படுத்தாமல், ஆங்கிலத்திலேயே பேசினார். 

விவசாயி அமித், 4 நிமிடங்கள் பேசுகையில் அதில் பல வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்தது கண்டு முதல்வர் நிதிஷ் குமார் கோபமடைந்தார். உடனடியாக முதல்வர் நிதிஷ் குமார் அருகே இருந்த மைக்கை எடுத்து, “ என்ன இது, இது பீகார் என்பது உங்களுக்குத் தெரியாதா. என்ன பேசினாலும் ஆங்கில வார்த்தைகளாகப் பேசுகிறீர்கள். அவ்வளவு பெரியளாகிவிட்டீர்களா.

இந்த தேசத்தின், மாநிலத்தின் மொழியான இந்தியை எவ்வாறு உங்களால் மறக்க முடிந்தது. எனக்கு உண்மையாகவே அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஒரு விவசாயி, விவசாயிகளுக்க ஆலோசனை வழங்குகிறீர்கள்,

சாமானியர்களுக்காகவே விவசாயம் செய்கிறீர்கள். உங்களை இங்கு அழைத்தது வேளாண் தொடர்பான அனுபவங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளத்தான். ஆனால், இது இங்கிலாந்து போன்று நீங்கள் நினைக்கிறீர்களா. இது இந்தியா, நீங்கள் பீகாரில்தான் வாழ்கிறீர்கள்

பிரதமர் மோடியின் மருமகளிடம் கைவரிசை காட்டியவர் கைது

இங்கு என்ன நடக்கிறது. கொரோனா காலத்தில் இருந்து நான் மக்களைக் கவனித்து வருகிறேன், மக்கள் செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். பழங்கால மொழியை மறந்துவிட்டார்கள். உங்கள் மொழியை தெரிந்திருப்பது அவசியம், ஆனால் உங்கள் செயல் வரவேற்கும்படியாக இல்லை. என்னவேண்டுமானாலும் பேசலாம், ஆனால், அதை உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்.” எனத் தெரிவித்தார்

இதைக் கேட்ட விவசாயி அமித், முதல்வர் நிதிஷ் குமாரிடம் மன்னிப்புக் கோரினார். அடுத்த 10நிமிடங்கள் பேசிய அமித், தனது பேச்சில் ஒரு வார்த்தை மட்டுமே ஆங்கிலத்தில் உச்சரித்தார். அப்போது தனது பேச்சில் மதிய உணவில் குழந்தைகளுக்கு மஷ்ரூம்(காளான்) சேர்க்க வேண்டும் என்று அமித் தெரிவித்தார்

அப்போது எழுந்த முதல்வர் நிதிஷ்குமார் “ மஷ்ரூம் என்பது இந்தி வார்த்தையா, இது ஆங்கில வார்த்தை. இந்த வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கும், எனக்கும் தெரியும் மற்றவர்களுக்குத் தெரியுமா.உங்கள் மண்சார்ந்த மக்கள் விவசாயிகள் இருக்கும்போது, சொந்தமாநிலத்தில் பேசும் போது தாய்மொழியில் பேசுங்கள்”என கோபமாகத் தெரிவித்தார்

click me!