
ரொக்கமில்லா பரிவர்த்தனைக்காக பிரதமர்மோடி அறிமுகம் செய்த ‘பிம்’ செயலியை இதுவரை 17 கோடி பேர் பதிவிறக்கம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர் என்று நிதி அயோக் துணைத்தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி பிரதமர் மோடி ‘பிம்’ என்ற செயலியை அறிமுகம் செய்தார். சட்டமேதை அம்பேத்கர் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயி முதன் முதலில் ஆன்ட்ராய்டு தளத்தில் இயங்கும்ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
வழக்கமான பே-டிஎம், மொபைவிக் ஆகிய மொபைல் வாலட்கள் வைத்திருப்பவர்களுக்கு இடையில்தான் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால், இந்த பிம் செயலி முற்றிலும் வேறுபட்டது. பிம் செயலி மூலம் எந்த மொபைல் வாலட்டுக்கும் பணம் அனுப்ப முடியும், பெற முடியும். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாத்தில் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக பதவிறக்கம் செய்த இருந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி விமானநிலையத்தில் நிதி அயோக் அமைப்பின் துணைத்தலைவர் அமிதாப் காந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ரொக்கமில்லா பரிமாற்றத்துக்காக பிரதமர் மோடி அறிமுகம் செய்த பிம் செயலி மக்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்துள்ளது. கடந்த 2 மாதத்துக்குள் 17 கோடி பேர் இந்த செயலியை பதவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலி மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது, பரிமாற்றத்தை வேகமாகச் செய்யக்கூடியது அதனால், மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் சில கோளாறுகள் இருந்தன அது சரிசெய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாக 17 கோடி பேர் பதவிறக்கம் செய்தது உலக சாதனையாகும்'' என்றார்.