Bharat: இந்தியா கிடையாது.. 'பாரத்'.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு பெயர் மாற்றம் !!

By Raghupati R  |  First Published Sep 9, 2023, 11:30 AM IST

ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


புது டெல்லியில் இன்று (சனிக்கிழமை) ஜி 20 உச்சி மாநாட்டின் துவக்க விழா நடைபெற்றது.  பிரதமர் மோடி தனது தொடக்க உரைக்கு முன்னதாக, ஜி 20 உச்சி மாநாட்டின் இடமான பாரத் மண்டபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களை பாரத மண்டபத்தில் வரவேற்றார்.

Latest Videos

undefined

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநரும் தலைவருமான Kristalina Georgieva மற்றும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) இயக்குநர் ஜெனரல் Ngozi Okonjo-Iweala ஆகியோர் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கிற்கு முதலில் வந்தவர்கள் ஆவார்கள்.

BSNL : தினமும் 2 ஜிபி டேட்டா.. 150 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.397க்கு இப்படியொரு திட்டமா.!!

பிறகு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயர் இருக்கும் இடத்தில் பாரத் என்று பெயர்ப்பலகை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்

எதிரிக்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்திருப்பதன் காரணமாக, இந்திய நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என்று பாஜக தரப்பில் கடந்த சில நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

click me!