Bharat Jodo Yatra's closing ceremony: ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்ரா ஸ்ரீநகரில்இன்று நிறைவு

By Pothy RajFirst Published Jan 30, 2023, 10:59 AM IST
Highlights

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடத்திய, பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நடத்திய, பாரத் ஜோடோ யாத்திரை இன்று ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியணா, டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைக் கடந்து 4ஆயிரம் கி.மீ நடந்துள்ளார்.

தேசியக் கொடி மிஞ்சிய ராகுல் கட்அவுட்! காங்கிரசை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்கள், 100 சாலை ஓரக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர் சந்திப்புகள், 275 நடைபயண பேச்சுகள், 115 ஆலோசனைக் கூட்டங்களை  நடத்தியுள்ளார். 

இந்த நடைபயணம் இன்று ஸ்ரீநகரில் லால்சவுக் பகுதியில் முடிகிறது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார். 

அதன்பின் ஸ்ரீகநரில் உள்ள மைதானத்தில் இன்று மிகப்பெரிய பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்தில் 21 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலங்குதேசம் கட்சி, சிவசேனா, சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசிய காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது. 

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா:மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா கருத்து என்ன?

சில கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் பங்கேற்க முடியாத சூழலில், கட்சியின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் , சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பங்கேற்காது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

click me!