All-party meeting: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

By SG BalanFirst Published Jan 30, 2023, 10:42 AM IST
Highlights

2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாத இறுதியில் தொடங்கும். இதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முழு ஒத்துழைப்புடன் இந்தக் கூட்டத்தொடரை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Smallest Wooden Spoon: சோற்றுப் பருக்கையைவிட குட்டியாக மர ஸ்பூன்! இந்திய சிற்பியின் கின்னஸ் சாதனை!

நாளை நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது. இந்தக் கூட்டம் நாடாளுமன்ற மையக் கட்டிடத்தில் நடைபெறும். திரௌபதி முர்மு 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்திற்கு பின் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதுதான் அவர் தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இருக்கும்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தக் கூட்டம் பட்ஜெட் தாக்கலுடன் முடியும். மீண்டும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை அடுத்தகட்ட கூட்டத்தொடர் நடைபெறும்.

Adani Group Share:இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு:அதானி குழுமம் 413 பக்க பதிலடி

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒன்பது மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் முக்கிய சலுகை அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேசிய ஜனநாயாக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

click me!