இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா 3வது இடத்தையும், குஜராத் 4வதுஇடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா 3வது இடத்தையும், குஜராத் 4வதுஇடத்தையும் பிடித்துள்ளன.
கடந்த 2018ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழகம் முதலாவது இடத்தை தக்கவைத்து வருகிறது. கேரள மாநிலம் கடந்த 2018ம் ஆண்டு 3வது இடத்தையும், 2019ல் 5வது இடத்தையும், 2020ம் ஆண்டில் 4வது இடத்தையும் பிடித்திருந்தது.
விஜய் திவாஸ் ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு, முக்கியத்துவம் என்ன?
ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நி்ர்வாகம், மின்னணு நிர்வாகம், உள்ளிட்ட பல்வேறு அளவு கோல்கள் அடிப்படையில் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது. அதில் தமிழகம் ஒட்டுமொத்தமாக 2080 மதிப்பெண்களில் 1,321.50 மதிப்பெண்கள் பெற்று முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டில், தமிழகம், 1,303.50 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், டீசலுக்கு வரி குறைப்பு
2-வது இடத்தில் இமாச்சலப்பிரதேச மாநிலம் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 2080 மதிப்பெண்களில் இமாச்சலப்பிரதேசம் 1,312 மதிப்பெண்களை பெற்று 2வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 2வது இடத்தில் இமாச்சலப்பிரதேசம் இருந்து வருகிறது.
கேரள மாநிலம், 1,263 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும், குஜராத் மாநிலம், 1,217 மதிப்பெண்களுடன் 4வது இடத்திலும் உள்ளன. பஞ்சாப் அரு 1,215 மதிப்பெண்களுடன் 5வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 3வது இடத்தில் இருந்த பஞ்சாப் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது.
இந்தியப் பொருளாதாரத்துக்கு அடுத்த ஆண்டு கடினமானதாக இருக்கும்: ரகுராம் ராஜன் கணிப்பு
தமிழகத்தை ஒரு லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரதமாக மாற்றுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில் உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழகம் அமைத்துள்ளது.
இந்த குழுவினர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள், குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சி, வளர்சிச்சிக்குறைவான துறைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஆலோசனை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 49 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையொப்பமிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.28,508 கோடிக்கும் அதிகமாகும். இதன் மூலம் 83ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இது தவிர விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள், நீர்பசான மேலாண்மைத் திட்டங்கள், சமூகநலத்திட்டங்கள், மக்களின் பங்கேற்பு திட்டங்கள்,நீர்நிலைகள் ஆக்கிமிரப்பு அகற்றம் ஆகியவற்றால் வேளாண் வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது.
Tamil Nadu is ranked the best state again by India Today for 2022. TN has been top ranked since 2018. All states are evaluated on parameters like economy, education,health, governance etc.. 1️⃣🙌 pic.twitter.com/0Wq4VkrFpd
— Chennai Updates 2.0 (@UpdatesChennai2)தமிழகத்துக்கு நிதிஅமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தபின், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது, அதேசமயம், நிகர கடன் 30.3 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நிதியாண்டில் செப்டம்பர் வரை தமிழக அரசின் நிகரக் கடன் ரூ.35ஆயிரம் கோடியாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் நிகரக் கடன்ரூ.24,403 கோடியாக 30.3 சதவீதம் குறைந்துள்ளது.
கடன் சுமை குறைவதோடு மட்டுமின்றி வருமானம் உயர்வதற்கான வழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்கள்தான் உபரி வருமான மாநிலங்களாக உள்ளன. அந்தப் பட்டியலி்ல விரைவில் தமிழகமும் சேரும்.