பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்... போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இதுதான் ஒரே வழியா?

By SG Balan  |  First Published Oct 5, 2023, 3:55 PM IST

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டதால் அதை சமாளிக்க பள்ளி வேலை நேரத்தை மாற்ற அமைக்கலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.


கர்நாடகாவின் பள்ளிக்கல்வித் துறை, பெங்களூரு முழுவதும் உள்ள பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்றியமைக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரம் முழுவதும் பள்ளி நேர திருத்தம் குறித்து ஆலோசிக்க செய்ய வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டம் நடந்துள்ளது.

பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டதால் அதை சமாளிக்க பள்ளி வேலை நேரத்தை மாற்ற அமைக்கலாம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து பள்ளி நேரத்தை மாற்றுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

சமீபகாலமாக பெங்களூரு கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க போராடி வருகிறது. இப்போது சாலைகளில் நெரிசலைக் குறைக்க பள்ளி நேரத்தை மாற்றி அமைப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, நகரின் பெரும்பாலான பள்ளிகள் காலை 8:30 மணிக்கு தொடங்குகின்றன. இது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரோஜாவின் ஆபாசப் படத்தை முழுமையாக வெளியிடுவோம்: தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி மிரட்டல்

பள்ளி நிர்வாகிகள், தனியார் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் பெற்றோர்கள் போக்குவரத்து நெரிசல் குறித்து தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர். பள்ளி வேலை நேரத்தை முன்கூட்டியே தொடங்கினால் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் உடல் மற்றும் மனநலனை மோசமாக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள பள்ளிகளின் கூட்டமைப்பு (KAMS) பள்ளி நேரத்தை மாற்றியமைப்பதில் உள்ள சவால்களை எடுத்துரைத்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஷஷி குமார் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் ஏற்கெனவே மன அழுத்தத்தை அனுபவித்து வருகின்றனர். பள்ளி நேரத்தை மாற்றுவது இந்த நிலையை மோசமாக்கும். " என்கிறார்.

டைப்பிங் தெரியுமா? சென்னையிலேயே சூப்பர் வேலை ரெடி! மத்திய அரசு பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

"பொதுவாக, தினசரி வீடுகளில் அன்றாடப் பணிகள் அதிகாலை 4.30 மணிக்கே தொடங்கும். பள்ளி நேரத்தை மாற்றுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமின்றி, தூக்க நேரத்தையும் குறைக்கும்" என்று சொல்கிறார்.

போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க அரசு பள்ளி நேரத்தை மாற்றுவதற்குப் பதில் வேறு சில கொள்கை மாற்றங்களை பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். "உதாரணமாக, காலை 7:00 மணிக்கே அனைத்துப் பள்ளிகளிலும் போக்குவரத்து காவலர்களை நிறுத்த வேண்டும். வகுப்புகள் தொடங்கும், முடியும் நேரங்களில், பள்ளிகளுக்கு அருகில் உள்ள முக்கிய சந்திப்புகளில் குறைந்தது இரண்டு போக்குவரத்து போலீஸார் நியமிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

பள்ளிகளைச் சுற்றி உள்ள பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்தல், பள்ளி மாணவ மாணவிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவித்தல், பள்ளி நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்றவற்றையும் பரிசீலிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

"ஆண் ஆண்தான், பெண் பெண்தான்": மூன்றாவது பாலினம் குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சர்ச்சை பேச்சு

click me!