நடுரோட்டில் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவிகள் - என்ன காரணம் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published May 19, 2022, 11:16 AM IST
Highlights

மோதலில் ஈடுபட்ட மாணவிகளில் ஒரு பிரிவினர் பள்ளி சீருடையிலும் மற்றொரு பிரிவினர் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்து இருந்தனர். 

பெங்களூருவில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு குடிமிபிடி சண்டை போடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மாணவிகள் இடையே நடைபெற்ற மோதலில் இருதரப்பினர் சண்டையிட்டு கொண்டனர். மாணவிகள் பொது இடத்தில் மோதிக் கொண்ட சம்பவம் பெங்களூருவின் விட்டல் மல்லையா ரோடு பகுதியில் நடைபெற்றது. மோதலின் போது மாணவிகள் பேஸ் பால் மட்டையை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

பள்ளி சீருடை:

மேலும் ஒரு மாணவி மற்றொரு மாணவியின் முடியை பிடித்துக் கொண்டு படிக்கட்டுகள் வழியாக கீழே இழுத்து வந்து சுவரில் வேகமாக இடிக்கும் காட்சிகள் வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. மோதலில் ஈடுபட்ட மாணவிகளில் ஒரு பிரிவினர் பள்ளி சீருடையிலும் மற்றொரு பிரிவினர் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்து இருந்தனர். 

இதோடு மாணவிகள் ஒருவரை ஒருவர் எட்டி மிதித்துக் கொள்வது,  குத்திக் கொள்வது மற்றும் தள்ளி விடுவது என பயங்கரமாக தாக்கி கொண்டனர். மோதலின் போது சில மாணவிகள் அங்கிருந்து வேக வேகமாக கிளம்பி செல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. மாணவிகள் மோதலை அடுத்து அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. சிலர் மாணவிகளின் மோதலை தடுக்கவும் முயற்சி செய்தனர்.

வீடியோ:

மேலும் சிலர் மோதலை தங்களின் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். நீண்ட மோதலை அடுத்து மாணவிகளை சிலர் ஒன்று சேர்ந்து தடுத்தனர். அப்போது ஒரு மாணவியின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்திக் கொண்டே இரு மாணவிகளின் உதவியோடு அங்கு இருந்து கிளம்பி செல்கிறார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

மேலும் மாணவிகள் என்ன காரணத்திற்காக மோதி கொண்டனர் என்ற தகவலும் மர்மமாகவே உள்ளது. திடீரென மோதலில் ஈடுபட்ட மாணவிகள், அங்கு மக்கள் கூட்டம் கூடியதையோ சிலர் தங்களை வீடியோ எடுப்பதையோ பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் சண்டியைட்டனர். மாணவிகளின் மோதல் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

click me!