Drug Test : பெங்களுருவில் நடந்த ஒரு போதை பார்ட்டியில் கலந்துகொண்டு போதை பொருள் உட்கொண்டதாக இரு முன்னணி நடிகைகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகே உள்ள ஹெப்பாகோடி என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜி.ஆர் பார்ம் ஹவுஸ் என்கின்ற பண்ணை வீட்டில் போதை பார்ட்டி நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் பெங்களூரு போலீசார் கடந்த மே 20ம் தேதி அந்த பார்ட்டியின் இடையே அதிரடி சோதனை நடத்தினர். மேலும் இந்த நிகழ்வு சம்பந்தமாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திலேயே ஐவரை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெங்களூரு காவல்துறை கமிஷனர் தயானந்தா இந்த வழக்கில் மொத்தம் 101 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வாசு என்பவருடைய பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் தான் இந்த போதை பொருள் பார்ட்டி சம்பவம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
undefined
மேலும் இந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கு சோதனை நடத்திய பொழுது அதில் பங்கேற்ற 59 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர் மேலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்
அந்த பார்ட்டியில் நடத்திய சோதனையில், 14.40 கிராம் எம்.டி.எம்.ஏ மாத்திரைகள், 1.16 கிராம் எம்.டி.எம்.ஏ., 6 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 5 கிராம் கோகைன், 5 கிராம் கோகைன், மற்றும் பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஹைட்ரோ கஞ்சா, ஐந்து மொபைல் போன்கள், இரண்டு வாகனங்கள் - ஒரு வோக்ஸ்வேகன் மற்றும் ஒரு லேண்ட் ரோவர் - மற்றும் DJ உபகரணங்கள், ரூ 1.5 கோடி மதிப்புள்ள ஒலி மற்றும் ஒளி அமைப்புகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த பார்ட்டியில் பங்கேற்றதாக பிரபல தெலுங்கு நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷி ராய் ஆகிய இருவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அவர்கள் இவரும் போதை பொருள் உட்கொள்ளவில்லை என்று கூறிவந்த நிலையில், அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் இருவரும் போதை பொருள் உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.