வாக்குப்பதிவு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் வெளியிடக் கோரிய மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடவும், படிவம் 17சி (ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளை பிரதிபலிக்கும்) நகல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தேர்தல்கள் நடைபெற்று வரும் போது அதுபோன்று உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விசாரணையை தள்ளி வைத்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே, தேர்தல் ஆணையம் அளித்த வாக்குப்பதிவு புள்ளி விவரங்களில் முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
undefined
இதனிடையே, வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்குள் பதிவான வாக்கு விகிதங்களை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த இடைக்கால மனு குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 24ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்திருந்தது.
அதன்படி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தைக் கிளப்பி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்து கொண்டு இருப்பதால் தான் அது பொதுமக்களிடம் தாக்கம் ஏற்படுத்தி வாக்களிக்க வருவதை குறைத்து விடுகிறது. மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய இத்தகைய மனுக்களே காரணம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவித்தது.
மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பொதுமக்கள் நலனுக்கு கேடு விளைவிக்க கூடியதாக உள்ளது. கோடிக்கணக்கான நாட்டு மக்கள் வாக்களிக்கின்றனர். இத்தகை மனுக்கள் மக்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை சேதப்படுத்துகிறது எனவும் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கையை 48 மணி நேரத்திக்குள் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட இடைக்கால மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.
நீண்ட உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார் தமிழக முதல்வர்? அண்ணாமலை கேள்வி!
நாளை ஆறாவது கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. தற்போதைய சூழலில் இந்த மனுவை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கின் விசாரணையை கோடை விடுமுறைக்கு பிறகு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா தொடர்ந்த வழக்கு இறுதி உத்தரவுக்காக நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்குவது அந்த வழக்கில் இறுதி நிவாரணம் வழங்குவது போன்றதாகி விடும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வாக்குபதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக வெளியிட்டது. முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை 11 நாட்கள் கழித்தும், இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை 4 நாட்கள் கழித்தும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தேர்தல் நடந்து முடிந்த அன்று வெளியான சதவீதத்துக்கும், நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியான வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் சில முரண்பாடுகள் இருந்தன. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.