Bengaluru Water Shortage : பெங்களுருவில் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் இந்த நேரத்தில், தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு எதிராக புதிய நடவடிக்கையை அம்மாநில அரசு எடுக்கவுள்ளது.
பெங்களூரு நகரில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சியில் பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நகரில் நிலவும் நெருக்கடியை மனதில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நகரவாசிகள் வாகனங்களை கழுவுதல், கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், திரையரங்குகள் மற்றும் மால்களில் (குடிநீரைத் தவிர) தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
undefined
முக்கியமான போர் விமானத் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்!
அரசின் இந்த நடவடிக்கையை மீறுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால், ஒவ்வொரு முறையும் 500 ரூபாய் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்றும் வாரியம் முடிவு செய்துள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள்தொகை கொண்ட பெங்களூரு, அதன் தினசரி தண்ணீர் தேவையில் 1,500 MLD (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது 2,600-2,800 MLD வரை உள்ளது.
பெங்களூரு மட்டுமின்றி, துமகுரு மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களின் சில பகுதிகளும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பகுதிகளாக வருவாய்த்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் 236 தாலுகாக்கள் வறட்சி பாதித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன, அதில் 219 கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றன.
குடிமக்கள் சங்கங்களில் இருந்து மறுசுழற்சி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசு தீர்வுகளை ஆராய்ந்து வருகிறது. சட்டவிரோத தண்ணீர் டேங்கர் நடவடிக்கைகளைத் தடுக்க அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில், அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஹெல்ப்லைன்கள் மற்றும் கட்டுப்பாட்டு எண்கள் புகார்களால் நிரம்பி வழிகின்றன.
உஜ்வாலா பயனாளிகளுக்கு பெரிய பரிசு அளித்த மத்திய அரசு..ரூ.300 எல்பிஜி மானியம் நீட்டிப்பு..