பெங்களூரு காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 74 வயது சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர்களின் மகளான ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கூறுகையில், கடந்த திங்கள்கிழமை இரவு 8:30 மணியளவில், மேலிருந்து தரை தளத்தில் விழுந்து கிடந்த தனது பொம்மையை எடுக்க அவரது மகள் கீழே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவர் திடுக்கிட்டதாகவும், சிறுது நேரத்தில் அவரது மகள் அழுதுகொண்டே திரும்பி வந்ததாகவும் அந்த தாய் கூறியுள்ளார்.
அந்த 7 வயது சிறுமியின் உதடுகள் வீங்கி இருந்ததையும், கீழே தனக்கு நடந்ததைச் சொல்லியும் அந்த சிறுமி அழுதுள்ளார். மேலும் அந்த சிறுமி மிகுந்த பயந்த நிலையில் இருந்ததாகவும் அந்த தாய் கூறியுள்ளார். இந்த விஷயம் அந்த சிறுமியின் தந்தைக்கும் தெரியவர, உடனே அவர் கீழே உள்ள வீட்டின் உரிமையாளரான ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியிடம் சென்று நியாயம் கேட்டடுள்ளார்.
வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தி கல்லா கட்டிய கணவன், மனைவி; காவல்துறை அதிரடி
அப்போது அந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகன் தன்னை மிரட்டியதாக அந்த தந்தை கூறினார். அந்த மகனும் காவல் துறையில் பணிபுரிகிறார் என்றும், மேலும் தனக்கு பல ரௌடிகளை தெரியும் எனக் கூறி மிரட்டியதாகவும் அவர் கூறினார். "அமைதியாக தரும் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைக் காலி செய்யச்சொன்னதாகவும்" அந்த தந்தை குற்றம் சாட்டினார்.
பின்னர் சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்ய, அவர்கள் எஃப்ஐஆர் பதிவு செய்து, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.
சிறுமி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. சிறுமியின் தந்தையை மிரட்டி, குற்றத்தை மறைக்க முயன்ற, கைது செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
சம்பவம் நடப்பதற்கு சுமார் 8 நாட்களுக்கு முன்பு தான், அந்த வீட்டின் மேல் தளத்திற்கு அவர்கள் குடியேறியது குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில் வீட்டு வேலைக்கு வந்த சிறுமிய பல ஆண்டுகளாக மிரட்டி வன்கொடுமை செய்த இருவர் கைது