நாடே காசுக்கு அலைஞ்சுட்டு இருக்கு... ராமர் கோயிலுக்கு பிச்சைக்கார் வெள்ளி கிரீடம் காணிக்கை

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
 நாடே காசுக்கு அலைஞ்சுட்டு இருக்கு... ராமர் கோயிலுக்கு பிச்சைக்கார் வெள்ளி கிரீடம் காணிக்கை

சுருக்கம்

ஆந்திரமாநிலம், விஜயவாடாவில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 1.50 லட்சத்தில் ராமர் கோவில் ஒன்றுக்கு வெள்ளியில் கிரீடம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார். 

பணத்தட்டுப்பாடு

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாட்டில் பணத்தட்டுப்பாடு தலைவரித்து ஆடும் நிலையில், பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 1.5 லட்சத்துக்கு கிரீடம் கொடுத்து இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. 

பிச்சை எடுத்து

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதானவர் யாடி ரெட்டி. இவர்தான் அந்த கிரீடம் கொடுத்த பிச்சைக்கார். இளம் வயதில் பல வேலைகள் செய்து, ரிக்‌ஷா இழுத்து, பிழைப்பு ஓட்டியவருக்கு, வயது முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால், கடந்த சில ஆண்டுகளாக வியவாடா நகரில் உள்ள ராமர் கோயில் முன் வழக்கமாக பிச்சை எடுத்து பிழைப்பை ஓட்டி வருகிறார். 

ரூ.1.50 லட்சம்

இவருக்கு நாள்தோறும் கிடைக்கும் பிச்சைக்காசு, அவரின் தேவையைக் காட்டிலும், மிஞ்சியதால், அதை பக்திப்பணிகளுக்கு செலவு செய்ய திட்டமிட்டார். 

இது குறித்து பிச்சைக்காரர் யாடிரெட்டி கூறுகையில், “ நான் இந்த  அளவு உடல்நலத்துடன் இருப்பதற்கு கடவுள்தான் காரணம். அதற்கு நன்றி சொல்லும்விதமாக ராமர் கோயிலுக்கு ரூ.1.50 லட்சத்தில் வெள்ளிக்கிரீடம் காணிக்கை செலுத்தினேன்'' என்றார். 

பணம் பொருட்டல்ல

இந்த ராமர் கோயிலின் நிர்வாகத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கவுதம் ரெட்டி கூறுகையில், “ இந்த கோயிலின் வாசலில் யாடி ரெட்டி பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தின் மூலம், கடவுளுக்கு பணிகள் செய்வதின் மூலம் பணம் வாழ்க்கையல்ல என்பதை நிரூபித்துவிட்டார்'' என்றார். 

இதற்கு முன்

பிச்சைக்காரர் யாடி ரெட்டி இதற்கு முன், முட்யாலம்பாடு நகரில் உள்ள ராமர் கோயிலுக்கும், சாய்பாபா கோயிலுக்கும் இதுபோல் ரூ.1.50 லட்சத்தில் வெள்ளி கிரீடம் காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், அன்னதானத்துக்காக ரூ.20 ஆயிரம்வரை நன்கொடை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

PREV
click me!

Recommended Stories

Powerful Women: அதிகாரத்தின் உச்சத்தில் 'அம்மாக்கள்' - இந்தியாவின் 8 சக்திவாய்ந்த பெண் தலைவர்கள்
ஃபேனுக்குப் பாதுகாப்பா..? மாணவர்களுக்குப் பாதுகாப்பா..? வைரலாகும் ஹாஸ்டல் வீடியோ..!