
கேரள மாநிலம், கொச்சிக்கு நேற்று பிரதமர் மோடி வருகையை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மாட்டிறைச்சி சமைத்து திருவிழா நடத்தினர். இதையடுத்து, அவர்களை முன் எச்சரிக்ைக நடவடிக்கையாக போலீசார் கைதுசெய்தனர்.
இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை சந்தையில் விற்கவோ, வாங்கவோ தடை செய்து சமீபத்தில் மத்திய அரசு உத்தரவுபிறப்பித்தது. இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளா, மேற்குவங்காளம், கர்நாடக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தீவிரப் போராட்டம் நடத்தினர்.
கொச்சியில் நேற்று மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினர்.
கொச்சியில் உள்ள கடற்படை விமானத் தளத்துக்கு அருகே இருக்கும் வத்துருத்திபகுதியில் இளைஞர் காங்கிரஸார் 10-க்கும் மேற்பட்டோர் மாட்டிறைச்சி சமைத்து, மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இது குறித்து கொச்சி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோஜ் கூறுகையில், “ பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10-க்கும் ேமற்பட்டோர் மாட்டிறைச்சி சமைத்து வழங்கிக்கொண்டு இருந்தனர். இவர்களை முன் எச்சரிக்கை நடவடிக்ைகயாக கைது செய்தோம். இவர்கள் மீது ஐ.பி.சி. 183, 142 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.