பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பார்படாஸ்! இந்திய மக்களுக்கு அர்பணித்த மோடி!

Rayar r   | ANI
Published : Mar 07, 2025, 05:13 PM IST
பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கிய பார்படாஸ்!  இந்திய மக்களுக்கு அர்பணித்த மோடி!

சுருக்கம்

பார்படாஸ் அரசு கொடுத்த 'Honorary Order of Freedom of Barbados' விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Barbados government confers highest award on PM Modi: பார்படாஸ் அரசு 'Honorary Order of Freedom of Barbados' என்ற விருதை பிரதமர் மோடிக்கு கொடுத்துள்ளது.  இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு உயரிய விருது 

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்த கௌரவத்துக்கு பார்படாஸ் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி. 'Honorary Order of Freedom of Barbados' விருதை 140 கோடி இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் பார்படாஸுக்கும் இடையிலான நெருங்கிய உறவுக்கு அர்ப்பணிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 


நரேந்திர மோடி தலைமை பண்பு 

இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பார்படாஸில் பிரிட்ஜ்டவுனில் நடந்த விழாவில, வெளியுறவு மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19 தொற்றுநோயின்போது செய்த உதவிக்காகவும், தலைமைத்துவத்துக்காகவும் கொடுக்கப்பட்ட 'Honorary Order of Freedom of Barbados' விருதை வாங்கினார். கயானாவில் பிரதமர் மோடியை சந்தித்தபோது பார்படாஸ் பிரதமர் மியா அமோர் மோட்லி இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோவிட்-19 தொற்றுநோயின்போது மோடி செய்த உதவிக்கு அவர் நன்றி சொல்லியிருந்தார். இப்போது பிரதமருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

எனக்கு பெருமையாக உள்ளது

"பிரதமர் நரேந்திர மோடியை பிரதிநிதித்துவப்படுத்துறது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த விருது இந்தியாவுக்கும் பார்படாஸுக்கும் இடையிலான உறவை காட்டுகிறது. அதுமட்டுமின்றி நெருக்கடியான நேரத்தில் நாங்கள் செய்த உதவிக்கும் இது ஒரு சான்று'' என்று பபித்ரா மார்கெரிட்டா பெருமையுடன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!