“சனி and ஞாயிற்றுகிழமைகளில் ‘வங்கிகள்’ திறந்திருக்கும்!!!” - பணம் மாற்ற வசதியாக ரிசர்வ் வங்கி அதிரடி

First Published Nov 10, 2016, 9:11 AM IST
Highlights


1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் நாளையும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி முதல் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் 12,13,14ம் தேதிகளில் தொடர் விடுமுறை என்பதால் எப்படி பணத்தை மாற்ற முடியும் என பொதுமக்கள் திணறி வந்தனர்.

இந்நிலையில், வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வங்கிகள் செயல்படும் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

இரண்டாவது சனிக்கிழமை என்றாலும் வங்கிகள் செயல்படும் என்றும், 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்ட நெரிசலை  கட்டுபடுத்த சிறப்பு ஏற்பாடு செய்யபடும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

click me!