Bank Holidays : மக்களே உஷார்.!! இன்று, நாளை மட்டுமல்ல.. 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !!

Published : Apr 01, 2022, 10:21 AM IST
Bank Holidays : மக்களே உஷார்.!! இன்று, நாளை மட்டுமல்ல.. 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை !!

சுருக்கம்

ஏப்ரல் மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  அது என்னென்ன நாட்கள் ? என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வங்கிகள் விடுமுறை :

விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப உங்களின் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். இதனால் நேர விரயத்தை தவிர்க்கலாம். குறிப்பாக, தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களில் விடுமுறை வர இருக்கிறது. 

ஏப்ரல் 1ஆம் தேதியன்று புதிய நிதியாண்டு தொடங்க இருக்கிறது. மாதத்தின் முதல் விடுமுறை நாளாகவும் அது அமைகிறது. இது தவிர்த்து தேசிய அளவிலான மற்றும் பிராந்திய அளவிலான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. 

 

ஏப்ரல் 1 - வங்கிக் கணக்குகளின் வருடாந்திர மூடல் - (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

ஏப்ரல் 2 – குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பேலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களின் வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 3 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)

ஏப்ரல் 4 - சாரிஹுல்-ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 5 - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் - ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை.

9 ஏப்ரல் - சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)

ஏப்ரல் 10 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)

ஏப்ரல் 14 - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு - ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

15 ஏப்ரல் - புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு - ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 16 - போஹாக் பிஹு - கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 17 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை) 

ஏப்ரல் 21 - கடியா பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன

ஏப்ரல் 23 - சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)

ஏப்ரல் 24 - ஞாயிற்றுகிழமை (வார விடுமுறை)

ஏப்ரல் 29 - ஷப்-இ-கத்ர்/ஜுமாத்-உல்-விடா - ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
ஜார்க்கண்ட் அரசியலில் திடீர் திருப்பம்! டெல்லியில் பாஜகவுடன் டீல் பேசிய ஹேமந்த் சோரன்!