அடிபட்டு உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் போட்டோ எடுத்து தள்ளிய கொடுமை - பெங்களூருவில் கேவலம்…

 
Published : Feb 02, 2017, 03:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அடிபட்டு உயிருக்கு போராடியவரை காப்பாற்றாமல் போட்டோ எடுத்து தள்ளிய கொடுமை - பெங்களூருவில் கேவலம்…

சுருக்கம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே கொப்பல் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற இளைஞர் மீது அரசு பஸ் மோதியதில் உயிருக்கு போராடிய அவரை காப்பாற்றாமல், மக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்து செல்போனில் போட்டோ எடுத்த கொடுமை நடந்துள்ளது.

அதன்பின், மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இந்த இளைஞர் உயிர் இழந்தார்.

காற்றில் பறந்த...

விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவும் உள்ளங்களை எந்த காரணம் கொண்டு போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டு இருந்தும், போலீசாரின் தொந்தரவுகளுக்கு பயந்தே இன்னும் மனிதநேயத்தை மறந்து காற்றில் பறக்கவிட்டு அலைகிறார்கள்.

குடும்பத்தை காப்பாற்றும் இளைஞர்

கொப்பல் நகரம், தேவராஜ் உர்ஸ் காலணியைச் சேர்ந்தவர் அன்வர் அலி (வயது18). இவர் கொப்பல் சந்தைப் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ்கடையில் பணியாற்றி வருகிறார். அன்வரின் தந்தை இறந்துவிட்டதால், தனது தாய், இரு சகோதரிகள், ஒருசகோதரர் அடங்கிய குடும்பத்துடன் அன்வர் வசித்து வருகிறார். இவரின் ஊதியத்தை நம்பியே குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

உயருக்கு போராட்டம்

இந்நிலையில், புதன்கிழமை காலை 8.40 மணிக்கு அன்வர் தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அப்போது, ஹோசபேட் நகரில் இருந்து ஹூப்ளி செல்லும் கர்நாடக அரசு பஸ் அன்வர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அன்வர், சாலையில் ரத்தம் சொட்ட, சொட்ட படுகாயத்துடன் விழுந்து உயிருக்கு போராடினார்.

வேடிக்கை

அன்வர் அடிபட்டு குற்றுயிரும், குலை உயிருமாக இருந்த இடத்தில் இருந்து கூப்பிடும் தொலைவில்தான். மருத்துவமனை இருந்தது.   ஆனால், அவரை சுற்றி நின்று மக்களில் ஒருவர் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

போட்டோ

மருத்துவமனைக்கு கொன்டு செல்லாமல் அவரை போட்டோ எடுத்து, வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக்கிலும் பதிவிடுவதில் மும்முரம் காட்டினர். சிலரோ காப்பாற்றினால், போலீசாரின் தொந்தரவுக்கு ஆளாக நேரிடும் என நினைத்து அங்கிருந்து நழுவினர்.

உயிரிழப்பு

இதையடுத்து, சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்க, 30 நிமிடங்கள் தாமதமாக அங்கு வந்தது. அதன்பின் அரசு மருத்துவமனைக்கு அன்வர்கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

காப்பாற்ற முடியவில்லை

இது குறித்து மாவட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுரேஷ் தனராடி கூறுகையில், “ விபத்து நடந்த அன்று அன்வரைகாலை 9.15 மணிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரின் இடுப்பு எலும்பு கடுமையாக சேதமடைந்து இருந்தது. உள் உறுப்புகளும் பாதிக்கப்பட்டு இருந்தன. இதனால், தீவிர சிகிச்சை அளித்தும்,  அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

உச்சநீதிமன்றம்

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்களுக்கு போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், போலீசாரின் தொந்தரவுக்கு பயந்து மக்கள் உதவ முன்வர மறுக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு
7 மணி ஆனா ஊரே ஆஃப் ஆயிடும்! தினமும் 2 மணி நேரம் டிஜிட்டல் விரதம் இருக்கும் வினோத கிராமம்!