344 மருந்துகளின் தடை நீக்கம் - டெல்லி உயா்நீதிமன்றம் அதிரடி

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
344 மருந்துகளின் தடை நீக்கம் - டெல்லி உயா்நீதிமன்றம் அதிரடி

சுருக்கம்

வலி நிவாரணி உள்ளிட்ட 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் மத்திய அரசு விதித்த தடையை நீக்கி டெல்லி உயா்நீதிமன்றம் அதிரடி தீா்ப்பளித்துள்ளது.

 

 

வலி நிவாரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய் எதிர்ப்புக்கான மருந்துகள், குறிப்பிட்ட சர்க்கரை நோய் மருந்துகள், சிகிச்சைக்கு உரியதாக இல்லாத மருந்துகள், குறிப்பிட்ட மருந்தினால் எவ்வித பயனும் இல்லாத மருந்துகள், ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துகள் என்று 344 மருந்துகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதித்து கடந்த மாா்ச் மாதம் 10-ந் தேதி மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. 

இந்த மருந்துகள் அனைத்தும் fixed dose combination என்ற வகையைச் சேர்ந்த மருந்துக் கலவை என்றும், இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து அவற்றை மத்திய அரசு தொிவித்தது. 

 

இதனை எதிர்த்து முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த டெல்லி உயா்நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பின்னர் விசாரணை நடைபெற்றது. 

 

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் தடை உத்தரவை ரத்து செய்வதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும் என கருதப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!