ராஜஸ்தானில் கடவுள் விநாயகப் பெருமானை போன்ற உருவத்தில் பிறந்த குழந்தை - அதிசய நிகழ்வு

By Raghupati R  |  First Published Aug 2, 2023, 7:29 PM IST

ராஜஸ்தான் மருத்துவமனையில் பிறந்த கடவுள் விநாயகப் பெருமானை போன்ற குழந்தை பிறந்தது.


ராஜஸ்தான் மாநிலம், தௌசாவில் உள்ள மருத்துவமனையில் விநாயகப் பெருமானை ஒத்த முகத்துடன் ஆண் குழந்தை பிறந்தது. ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜூலை 31 அன்று இரவு 9.30 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. 

பிறந்த உடனேயே, அந்த 'தெய்வீக' குழந்தையைப் பார்க்க மக்கள் குவிந்தனர். அந்தக் குழந்தைக்கு விநாயகப் பெருமானைப் போலவே தும்பிக்கை மற்றும் பிற அசாதாரண அம்சங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. பிரசவத்தின்போது தம்பதிக்கு உதவிய மருத்துவமனை ஊழியர்கள், பிறந்த குழந்தையின் அம்சங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Tap to resize

Latest Videos

ஆனால், குழந்தை பிறந்து 20 நிமிடங்களில் இறந்துவிட்டது. தௌசா மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் சிவராம் மீனா கூறுகையில், மரபணுக் கோளாறுகள் தவிர, குரோமோசோமால் கோளாறுகள் காரணமாக ஏலியன் போன்ற அம்சங்களுடன் குழந்தைகள் பிறக்கும் நிகழ்வுகள் உள்ளன.

ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக மாநில அரசால் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றார். "கர்ப்பிணிப் பெண்கள் இந்த திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களையும் தங்கள் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று டாக்டர் சிவராம் மீனா கூறினார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!