11 குழந்தைகளின் தாய் 38 வயதில் 20-வது முறையாக கர்ப்பம்... மருத்துவர்கள் அதிர்ச்சி..!

Published : Sep 10, 2019, 06:27 PM ISTUpdated : Sep 10, 2019, 06:28 PM IST
11 குழந்தைகளின் தாய் 38 வயதில் 20-வது முறையாக கர்ப்பம்... மருத்துவர்கள் அதிர்ச்சி..!

சுருக்கம்

மகாராஷ்ராவில் 38 வயது பெண் 11 குழந்தைகள் இருக்கும் நிலையில் 20-வது முறையாக கர்ப்பமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ராவில் 38 வயது பெண் 11 குழந்தைகள் இருக்கும் நிலையில் 20-வது முறையாக கர்ப்பமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் லங்காபாய் காராட்(38). இவருக்கு ஏற்கெனவே 11 குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமில்லாமல் 5 குழந்தைகள் பிறந்த ஒருவரிடத்திற்குள் இறந்துள்ளனர். மேலும் 3 முறை தானாகவே கருகலைந்துள்ளது. 

இந்நிலையில், 20-வது முறையாக கர்ப்பம் தரித்து பிரசவத்திற்கு தயாராகி வருகிறார். இதையறிந்த உள்ளூர் ஆரம்ப சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர். அவர் கருவுற்றவுடன், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டது. தாயும் குழந்தையும் நன்றாக உள்ளனர். அவருக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அவரை சுகாதார இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு லங்காபாய் ஒரு முறை கூட மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொண்டதில்லை. அனைத்து பிரசவமும் வீட்டில்தான் நடந்துள்ளது. இப்போதுதான் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே அதிக முறை பிரசவம் நடந்துள்ளதால், இவரது கர்ப்பபை வலு இழந்துள்ளது. ஆகவே இம்முறை பிரசவத்தின் போது இரத்தப் போக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அவரை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்க திட்டமிட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

இன்சூரன்ஸ் துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றம்!
அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கும் SHANTI மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!