இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு.. விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!

By Asianet TamilFirst Published Sep 10, 2019, 6:27 PM IST
Highlights

இஸ்ரோவில் காலியாக இருக்கும் டெக்னீஷியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளில் 86 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவில் டெக்னீஷியன், தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளில் 86 காலியிடங்கள் நிரப்பப்பட  உள்ளன. தகுயுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 
டெக்னீஷியன் பிரிவு - ஃபிட்டர், எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிளம்பர், வெல்டர், மெஷினிஸ்ட், டிராஃப்ட்ஸ்மேன்-மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்

தொழில்நுட்ப உதவியாளர் பிரிவு - மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில் 

தகுதி:  டெக்னீஷியன் பதவிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. அல்லது என்.டி.சி. அல்லது என்.ஏ.சி. ஆகியவற்றில் ஒன்றில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் டிப்ளமோவை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவு தேர்வின் (Skill Test ) அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

எழுத்துத் தேர்வு பெங்களூருவில் வைத்து நடைபெறும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் திறனறிவு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் இறுதி நாள்: 13.09.2019 

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.இந்த என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதைப்பற்றிய மேலும் விபரங்களுக்கு இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

click me!