சாமி சரணம்… அய்யப்பன் சரணம்… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு

Published : Oct 12, 2021, 08:48 AM IST
சாமி சரணம்… அய்யப்பன் சரணம்… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு

சுருக்கம்

சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயில் சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் துவங்க இருக்கிறது. இந்த பூஜைகளின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவானது நேற்றிரவு முதல் தொடங்கி இருக்கிறது. மொத்தம் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

பக்தர்கள் ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆன்லைன் புக்கிங் இணையதளத்தில் சென்று முதலில் கேட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

போட்டோ இணைத்து முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த பின்னர் அதற்கான அத்தாட்சி சீட்டு,  கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை தரிசனம் செய்யும் போது எடுத்து செல்லலாம்

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!