
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைளை கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்ககத்தின் தலைவர் அய்யா கண்ணு தலைமையில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடங்கத்தில் தமிழக விவசாயிகள் மட்டும் பங்கேற்ற இந்த போராட்டத்தில், நாளாக நாளாக அனைத்து மாநில விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒரு விதமாக தங்களது போராட்ட யுக்தியை மாற்றிவரும் அந்த விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து மு.க.ஸ்டாலின், தம்பிதுரை, ஜெயகுமார் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை விவசாயிகள் சந்தித்துப் பேசினர்.
ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்த போராட்டம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். மேலும் இந்த விவசாயிகளின் பிரச்சனை குறித்து கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அய்யா கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழு இன்று சந்தித்துப் பேசினர். அப்போது கெஜ்ரிவால் விவசாயிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யா கண்ணு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் வரை விடமாட்டேன் என தெரிவித்தார்,
விவசாயிகளின் பிரச்சனை குறித்து அவர் ஒரு உறுதியான முடிவு சொல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அய்யா கண்ணு தெரிவித்தார்.