கும்பாபிஷேகத்திற்குப் பிறகு அயோத்தி செல்ல சிறப்பு ரயில்கள் அட்டவணை! உடனே புக் பண்ணுங்க!

By SG Balan  |  First Published Jan 18, 2024, 3:32 PM IST

தமிழ்நாட்டில் இருந்து இயக்கபடும் ஆஸ்தா சிறப்பு ரயில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,300 கட்டணம் பெறப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எந்த நகரிலிருந்து ரயில் புறப்படுகிறது என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது.


வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாள் முதல் பொதுமக்கள் அந்தக் கோயிலில் வழிபாடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்தும் அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, கோவை, நெல்லை, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 9 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 22ஆம் தேதி முதல் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்கள் 22 பெட்டிகள் கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

அயோத்தி செல்வதற்கான இந்தச் சிறப்பு ரயில்களில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக டிக்கெட் புக் செய்யலாம். அயோத்தி சென்று மீண்டும் திரும்பி வருவதற்கும் சேர்ந்து ரவுண்ட் ட்ரிப் முறையில் புக்கிங் செய்துகொள்ளலாம்.

அயோத்தி ராமர் கோயிலுக்குச் ஓணவில் வழங்கும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில்!

தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து 66 நகரங்களில் இருந்து அயோத்திக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கூறுகிறது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கு ஆஸ்தா எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆஸ்தா என்றால் நம்பிக்கை. ராமர் மேல் பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறிக்கும் விதமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என ரயில்வே அமைச்சகம் கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து இயக்கபடும் ஆஸ்தா சிறப்பு ரயில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,300 கட்டணம் பெறப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.3,800 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எந்த நகரிலிருந்து ரயில் புறப்படுகிறது என்பதைப் பொறுத்து கட்டணம் மாறுபடுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து எந்தெந்த நகரங்களில் இருந்து ஆஸ்தா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன? ஆஸ்தா ரயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து அயோத்தி செல்ல விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்து தங்களுக்கு விருப்பமான ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

ஆந்திராவில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை: முதல்வர் ஜெகன் நாளை திறந்து வைக்கிறார்

click me!