புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கி இருக்கிறார்.
அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்பட்டுள்ளது என்று பாஜக எம்.பி. லல்லு சிங் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
"மாண்புமிகு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்பட்டுள்ளது" என்று லல்லு சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கி இருக்கிறார்.
மோடி செல்ஃபி பாயிண்ட் தேவையா? எதுக்கு இந்த வெட்டிச் செலவு? ஷாக் கொடுத்த ஆர்டிஐ பதில்!
अयोध्या जंक्शन हुआ “अयोध्या धाम” जंक्शन
भारत के यशस्वी मा॰ प्रधानमंत्री श्री जी के मार्गदर्शन में नवनिर्मित भव्य अयोध्या रेलवे स्टेशन के अयोध्या जंक्शन का नाम, जनभावनाओं की अपेक्षा के अनुरूप, परिवर्तित कर कर दिया गया है..
1/2.. pic.twitter.com/WHKpAb5wmO
வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
அயோத்தியில் 71 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ராம் லல்லா சிலை அடுத்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஏராளமான மண்டபங்களுடன் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.
கோயில் முழுவதும் சுவரோவியங்கள், சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் இருக்கும். ஒவ்வொரு தூணிலும் 25 முதல் 30 உருவங்கள் இருக்கும். கோயில் கட்டுமானப் பணி 2025 டிசம்பரில் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூதாட்டம் மற்றும் சட்டவிரோத கடன் தொடர்பான செயலிகளின் விளம்பரங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு