சூதாட்டம் மற்றும் சட்டவிரோத கடன் தொடர்பான செயலிகளின் விளம்பரங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு

By SG Balan  |  First Published Dec 27, 2023, 8:57 PM IST

இணையதளங்களில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளின் விளம்பரங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து இணையதளங்களிலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகளின் விளம்பரங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சட்டவிரோத கடன் மற்றும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளைத் தடைசெய்யவும் அகற்றவும் சமூக ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட இணையதளங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

"சட்டவிரோத கடன் மற்றும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பாக பயனர்களை தவறாக வழிநடத்தும் எந்த விளம்பரங்களையும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த இணையதள நிறுவனமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், டெலிகிராம் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையச் சூழலை உருவாக்கும் நோக்கில், டீப்ஃபேக் எனப்படும் ஆழ்நிலைப் போலிகள், தவறான தகவல்கள், சட்டவிரோத கடன் மற்றும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் பெருக்கம் போன்றவற்றை எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து நடத்திய கூட்டத்தில், சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, வங்கிகளுக்கு இன்னும் விரிவான KYC விதிகளை வகுக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியது.

Deepfake படங்களைத் தடுப்பது உங்க பொறுப்பு! சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!

click me!