புனேயில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புனே நகரின் விமன் நகர் பகுதியில் உள்ள சிம்பயோசிஸ் கல்லூரிக்கு அருகில் இன்று குறைந்தது 10-12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் வெடிப்பை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் 10-12 எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிலிண்டர் வெடிப்பு விபத்தில் இதுவரை எந்த சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
எல்பிஜி சிலிண்டர்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின் இந்த விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.