பக்தர்களே அலர்ட் !! நாளை முதல் 5 நாட்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்.. தேவஸ்தானம் திடீர் வேண்டுகோள்

By Thanalakshmi VFirst Published Aug 10, 2022, 6:29 AM IST
Highlights

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், நாளை முதல் 15 ஆம் தேதி வரை மாற்றுதிறனாளிகள், முதியவர்கள்,குழந்தைகள் உள்ளிட்டோர் கோவிலுக்கு வருவதை தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
 

திருப்பதி எழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். இந்நிலையில் நாளை 11-ம் தேதி ஸ்ராவன பவுர்ணமி, 12-ம் தேதி ஹயக்ரீவர் ஜெயந்தி, 13, 14-ம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ,15-ம் தேதி சுதந்திர தினம் என தொடர்ந்து விடுமுறைகள் வருகிறது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க:Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு...இந்த ராசிகளுக்கு குடும்ப வருமானம் அதிகரிக்கும்

இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் திருமலைக்கு வருவோர் தங்களது பயணத்தை தள்ளி போட வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அதுமட்டுமின்றி, 19-ம் தேதி கோகுலாஷ்டமி, 20 மற்றும் 21-ம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த 3 நாட்களிலும் பக்தர்கள் கூட்டும் அலைமோதும். எனவே, இந்த நாட்களில் பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தால் தவிர, திருமலைக்கு வருவதை தள்ளி போட வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது. 

மேலும் படிக்க:Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..

திருமலையில் நடைபெறும் பவித்ரோற்சவம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று துணை சன்னதிகள், உற்சவமூர்த்திகளுக்கு பவித்ர பட்டு நூற்மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னதாக உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.இதற்கான டிக்கெட்,  ஆகஸ்ட் 1-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டது. மேலும் திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாள் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்துக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தொடங்கிய பவித்ரோற்சவம், இன்றுடன் நிறைவடைகிறது. இந்த வருடாந்திர பவித்ரோற்சவத்தின் போது, கோவிலில் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய சிறப்பு யாகம் நடத்தப்படும். 

click me!