தாஜ்மகாலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் மீது தாக்குதல்! அறிக்கை கேட்கும் சுஸ்மா ஸ்வராஜ்!

Asianet News Tamil  
Published : Oct 26, 2017, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
தாஜ்மகாலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் மீது தாக்குதல்! அறிக்கை கேட்கும் சுஸ்மா ஸ்வராஜ்!

சுருக்கம்

Attack on tourists

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. தாஜ்மகாலைப் பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்விட்சர்லாந்து தம்பதிகள், தாஜ்மகாலைப் பார்வையிட வந்திருந்தனர். அவர்கள், அங்குள்ள தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, நான்கு பேர் கொண்ட கும்பலால் அவர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர். 

இதில் படுகாயமடைந்த அவர்கள், டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து புகார் எதுவும் காவல் துறைக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. ஆனாலும், காவல்துறையே தானாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடததி வருகிறது. 

விசாரணையில், ஸ்விட்சர்லாந்து தம்பதியை தாக்கியவர்கள், முகுல் மற்றும் அவரது நண்பர்கள் என்றும், செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட பிரச்சனையால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர.

வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், தாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், உத்தரபிரதேச அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!