பிரபல சைக்கிள் நிறுவன அதிபர் மனைவி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

Published : Jan 23, 2020, 11:26 AM IST
பிரபல சைக்கிள் நிறுவன அதிபர் மனைவி தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

சுருக்கம்

சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனம் அட்லஸ். இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவரது மனைவி நடாஷ் கபூர் (57). சஞ்சய் கபூரின் வீடு டெல்லியில் உள்ள அவுரங்கசீப் லேன் பகுதியில் வசித்து வந்தார். 

70 ஆண்டுகள் பழமையான பிரபல அட்லஸ் சைக்கிள்ஸ் நிறுவன அதிபரின் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனம் அட்லஸ். இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவரது மனைவி நடாஷ் கபூர் (57). சஞ்சய் கபூரின் வீடு டெல்லியில் உள்ள அவுரங்கசீப் லேன் பகுதியில் வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் நடாஷ் கபூர் சாப்பிடுவதற்கு தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரது படுக்கை அறையில் சென்று பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை கீழே இறக்கிவிட்டு, மருத்துவரை வீட்டுக்கு வரவழைத்தனர். பின்னர், பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்த போது போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலை என தெரிந்தாலும், அவரது அறைக் கதவு திறந்தே இருந்ததால் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!