குஜராத் தேர்தலில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கவில்லை தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி விளக்கம்

Asianet News Tamil  
Published : Dec 18, 2017, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
குஜராத் தேர்தலில் மின்னணு வாக்குபதிவு  எந்திரத்தில் தில்லுமுல்லு நடக்கவில்லை  தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி விளக்கம்

சுருக்கம்

Assembly Election Results 2017 There can be no tampering with EVMs says CEC AK Joti

குஜராத் சட்டசபைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்தவிதமான தில்லு முல்லு செயல்களும் நடவடிக்கவில்லை, எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது தேவையில்லாதது என தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி விளக்கம் அளித்துள்ளார்.

பட்டிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களில் 5 ஆயிரம் எந்திரங்களில் தில்லுமுல்லு செய்வதற்காக, 140 பொறியாளர்கள் தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ளனர். இதே போன்ற குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியும் முன்வைத்தது.

இதற்கிடையே குஜராத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள், ஒப்புகை வாக்குசீட்டுகளை 25 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மனுச் செய்தது. இதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

குஜராத் தேர்தலில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டதாவும், அதில் தில்லுமுல்லு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அகமதாபாத் மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், “ குஜராத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு நடந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியும், மற்றவர்களும் கூறும் குற்றச்சாட்டு ஏற்க முடியாது. இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டோம். வாக்குப்பதிவு அன்று யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகை சீட்டும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்த்து இருக்கிறார்கள்.

ஆதலால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இனி UPSC தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது! வெறும் 10 செகண்ட்ல செக்கிங் ஓவர்!
பராசக்தியாக மாறிய பிரதமர் மோடி.. 72 மணி நேரம்.. ஆடிப்போன சந்நியாசிகள்! சர்ப்ரைஸ் மொமண்ட்!