ENBA விருது விழாவில் 9 விருதுகளை வென்ற ஏசியாநெட் சுவர்ணா நியூஸ்!

Published : Aug 27, 2023, 10:24 PM ISTUpdated : Aug 27, 2023, 11:45 PM IST
ENBA விருது விழாவில் 9 விருதுகளை வென்ற ஏசியாநெட் சுவர்ணா நியூஸ்!

சுருக்கம்

எக்ஸ்சேஞ்ச் 4 மீடியா நியூஸ் பிராட்காஸ்டிங் விருதுகள் (ENBA Awards 2023) வழங்கும் விழாவில், கர்நாடகாவின் முன்னணி செய்தி சேனலான ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் 9 விருதுகளைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 4 விருதுகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்சேஞ்ச் 4 மீடியா நியூஸ் பிராட்காஸ்டிங் விருதுகள் (Exchange4Media News Broadcasting Awards) வழங்கும் விழாவில், கர்நாடகாவின் முன்னணி செய்தி சேனலான ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் ஒன்பது விருதுகளைப் பெற்றுள்ளது.

நேர்மை, துணிவு, பாரபட்சமின்மை என்ற உத்தரவாதத்துடன் செயல்பட்டுவரும் ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் சேனலின் முயற்சிகளுக்கு பலனளிக்கும் வகையில் இந்த விருதுகள் கிடைத்துள்ளது.

செய்தி வழங்குவதில் சேனலின் சிறந்த முயற்சிகள் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுகள் பார்வையாளர்களுக்கு செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை உயர்தரத்தில் வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருதவதைக் காட்டுவதாக அமைந்துள்ளன.

கன்னடப் பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் விருதுகளைப் பெற்றுள்ளன.

மணிப்பூரில் தொடரும் வன்முறை: வீடுகளுக்கு தீ வைப்பு, போலீசாரின் துப்பாக்கிகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்

விருதுகளின் பட்டியல்:

1. சிறந்த ஆரம்ப பிரைம் ஷோ (Best Early Prime Show:): "சினிமா ஹங்காமா" (மாலை 6.30 மணிக்கு)

2. சிறந்த லேட் பிரைம் டைம் ஷோ (Best Late Prime Time Show): "பிரைம் நியூஸ்" (இரவு 10 மணிக்கு)

3. சிறந்த காலைநேர நிகழ்ச்சி (Best Breakfast Show): "பிக் 3" (காலை 9 மணிக்கு)

4. சிறந்த ஆழமான தொடர் நிகழ்ச்சி (Best In-Depth Series): "கவர் ஸ்டோரி" (சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு)

5. சிறந்த செய்தித் தொகுப்பு (Best News Coverage): "யாதகிரிக்கு 2,054 கோடி தண்ணீர் திறப்பு"

6. சிறந்த தொகுப்பாளர் (Best Anchor): அஜித் ஹனக்கனவர்

7. சிறந்த நடப்பு நிகழ்வுகள் நிகழ்ச்சி (Best Current Affairs): முருக ஸ்ரீ பாலியல் பலாத்கார வழக்கு குறித்த "லெப்ட் ரைட் அண்டு சென்டர்" நிகழ்ச்சி

8. சிறந்த பிரைம் ஷோ (Best Prime Show): "நியூஸ் ஹவர்" (இரவு 8.30 மணிக்கு)

9. சிறந்த சமூக நல பிரச்சாரம் (Best Campaign for Social Cause): "வனவிலங்குகளைக் காப்போம்"

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் பல்வேறு பார்வையாளர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

ரூ.19,000 கோடி செலவில் 5 உதவி போர்க்கப்பல்கள்! கடற்படையை வலுப்படுத்த மத்திய அரசு ஒப்பந்தம்!

"சினிமா ஹங்காமா"

"சினிமா ஹங்காமா" நட்சத்திரங்களின் உலகத்தைப் பற்றிய செய்திகளை வழங்குகிறது. திரைப்படத் துறையின் சமீபத்திய செய்திகள் மற்றும் பொழுதுபோக்குச் செய்திகளை வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் யாஷ், சுதீப், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களுடன் நேர்காணல்கள் இடம்பெற்றன. பார்வையாளர்கள் மத்தியில் இது மிகுந்த வரவேற்பு பெற்றது.

"பிரைம் நியூஸ்"

"பிரைம் நியூஸ்", நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து குறிப்பிடத்தக்க செய்திகளைத் தொகுத்துக் கூறும் நிகழ்ச்சி. இதன் விரிவான செய்திகளுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளது. நாள் முழுவதும் நடந்த முக்கியமான நிகழ்வுகளைப் பற்றி பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்ச்சி.

"பிக் 3"

"பிக் 3", ஒரு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி. மாவட்டம், தாலுகா மற்றும் கிராம அளவில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துப் பேசுகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பரிந்துரைக்கப்படும். இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூகங்களில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழி வகுத்துள்ளது. இந்த "பிக் 3" நிகழ்ச்சி கர்நாடக மக்களின் இதயங்களைக் கவர்ந்திருக்கிறது.


"கவர் ஸ்டோரி"

ஊழல், சட்ட விரோதச் செயல்கள் போன்றவற்றை வெளிக்கொண்டுவரவும் அநீதியை அம்பலப்படுத்துவதும் "கவர் ஸ்டோரி" நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். அந்த நிகழ்ச்சி கள விசாரணை மூலம் அரசு திட்டங்களில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏராளமான ஊழல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட காரணமாக இருந்துள்ளது.

"வனவிலங்குகளைக் காப்போம்"

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் "வனவிலங்குகளை காப்போம்" என்ற தனித்து நிற்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் வனவிலங்கு பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த பிரச்சாரத்தின் தாக்கம் பல்வேறு நிலைகளில் பரவியுள்ளது. வன ஊழியர்களின் முயற்சிகளை அங்கீகரித்து, ஊக்குவித்தது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அப்போதைய முதல்வர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது, ஸ்ரீமுரளி மற்றும் ஸ்ருதி நாயுடு ஆகியோர் இந்த பிரச்சாரத்தின் தூதுவர்களாக இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தால், 

1. கர்நாடகாவில் முதல் முறையாக வனக் களப் பணியாளர்களுக்கு முதல்வரின் தங்கப் பதக்கம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

2. வனப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதில் சிறந்து விளங்கும் பஞ்சாயத்துகளுக்கு RO வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

3. DRFO சம்பள சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் வெளியிட்ட தொடர்ச்சியான செய்திகளால் புதிய சம்பள முறை நடைமுறைக்கு வந்தது.

2022 இல் 4 விருதுகள்:

2022ஆம் ஆண்டு நடைபெற்ற ENBA விருது விழாவில் ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் 4 விருதுகளை வென்றிருந்தது. செய்தி தொகுப்பாளரான ஜெயபிரகாஷ் ஷெட்டி சிறந்த தொகுப்பாளர் தங்கம் வென்றார். சிறந்த நடப்பு நிகழ்வுகள் பிரிவு, சிறந்த செய்தி பிரிவு ஆகியவற்றிலும் தங்கம் கிடைத்தது. சுவர்ணா நியூஸ் கவர் ஸ்டோரிக்காக வெள்ளி கிடைத்தது.

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் பற்றி:

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் என்பது ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் கீழ் இயங்கிவரும் கன்னட செய்தி சேனல் ஆகும். இந்த நிறுவனம் Jupiter Capital Private Limited இன் கீழ் செயல்படுகிறது. இந்த சேனல் மார்ச் 31, 2008 இல் அறிமுகமானது. இது கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் மூன்றாவது செய்தி சேனல் ஆகும்.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
AI என்றாலே இந்தியாதான்.. மைக்ரோசாப்ட் மிகப்பெரிய ஆசிய முதலீடு.. ரூ.1.5 லட்சம் கோடி!