நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் அம்ரித் மகோத்சவ் யாத்திரை தொடங்கப்பட்டது. கர்நாடகாவில் ஏசியாநெட் குழுமம்,அரசும் இணைந்து நடத்தப்பட்ட யாத்திரை நிறைவுக்கு வந்தது.
நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் அம்ரித் மகோத்சவ் யாத்திரை தொடங்கப்பட்டது. கர்நாடகாவில் ஏசியாநெட் குழுமம்,அரசும் இணைந்து நடத்தப்பட்ட யாத்திரை நிறைவுக்கு வந்தது.
நாட்டின் 75வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் வகையில் கடந்த 2021, மார்ச் 21ம் தேதி பிரதமர் மோடி அம்ரித் மகோத்சவ் யாத்திரையை தொடங்கினார். 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு, 75-வது சுதந்திரதினவிழாவின்போது முடியும் வகையில் அமைக்கப்பட்டது.
India@75 : ஆங்கிலேயரை பயமுறுத்திய பகத் சிங்கின் நண்பர்.. யார் இந்த அஷ்பகுல்லா கான் ?
இந்த 75 வாரங்களில் ஒவ்வொரு மாநில அரசுகளும்,மத்திய அ ரசும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின. நமது தேசத்தின் தலைவிதியைமாற்றும் நோக்கில் அனைவரும் இணைந்து செயல்படுவோரம் என்ற கருத்துருவில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு சுதந்திர தினமும், “ தேசம்தான் முதன்மை, எப்போதும் முதன்மை” என்றகருத்துருவில் கொண்டாடப்பட உள்ளது.
கர்நாடகாவில் தொடங்கிய அம்ரித் மகோத்சவ் நிகழ்ச்சியை அரசுடன் சேர்ந்து ஏசியாநெட் குழுமம் நடத்தியது. இந்த யாத்திரை கர்நாடக மாநிலத்தின் பல்வேறுபகுதிகளுக்கும் சென்று, இறுதியாக கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர். அசோக்கிடம் தேசியக் கொடி வழங்கப்பட்டது.
கர்நாடகாவின் சிங்கம் கங்காதரராவ் பாலகிருஷ்ண தேஷ்பாண்டே… யார் இவர்?
இந்த யாத்திரையில்பங்கேற்ற தேசிய மாணவர் படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கன்னடபிரஹா, சுவர்னாநியூஸ் தலைமைஆலோசகர் ரவி ஹெக்டே, சந்தைப்பிரிவு துணைத்தலைவர் அனில் சுரேந்திரா, பிரபல டாக்டர் ரிஷிகேஷ் டாம்லே ஆகியோரும் பங்கேற்றனர். இந்த யாத்திரை, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, சன்டிகர், இமாச்சலப்பிரதேசம் சென்று இறுதியாக லடாக்கில் முடியும்